- வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை எந்த அமைச்சுக்கு உரியது?
- தற்பொழுது இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- இலங்கையில் நாளொன்றுக்கு நிகழ்கின்ற வீதி விபத்துகளில் மரணமடைகின்றவர்களின் எண்ணிக்கையை அண்ணளவாகக் குறிப்பிடுக.
- மரணத்தை ஏற்படுத்துகின்ற வாகன விபத்துகளுக்கு பிரதான காரணம் யாது?
- ஐக்கிய நாடுகளின் அமைப்பு வீதிப் பாதுகாப்பு விடயம் தொடர்பாகப் பொறுப்பை ஒப்படைத்துள்ள நிறுவனத்தின் பெயர் யாது?
- உலகத்தில் வீதி விபத்து காரணமாக ஆண்டொன்றுக்கு மரணமடைகின்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- மரணத்தை ஏற்படுத்துகின்ற வீதி விபத்து காரணமாக உலகத்தில் ஆண்டொன்றுக்கு மரணமடைகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- ஐக்கிய நாடுகள் அமைப்பு வீதிப் பாதுகாப்பு தசாப்தத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த தசாப்தத்தைக் குறிப்பிடுக.
- அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்குள் வீதி பாதுகாப்புடன் தொடர்புபட்ட பணிகளை இணைப்பாக்கம் செய்தல்.
- அடையாளம் காணப்படாத வாகனங்களினால் விபத்துக்குள்ளாகின்றவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்.
- வீதிப் பாதுகாப்பு மற்றும் அதனோடு இணைந்த விடயங்களுடனான கருத்திட்டங்கள் மீது பொறுப்பு வகிக்கின்ற சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் தகவல்களை வழங்குதல்.
- தரவுக் களஞ்சியமொன்றைப் பேணுதல்.
- வாகனங்களின் தொகை மற்றும் அவற்றின் தன்மைகளின் சேர்க்கை.
- வீதி விபத்துக்கள்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச புள்ளிவிபரங்கள்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பாக நூலகம் ஒன்றைப் பேணுதல்.
- சமமான சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணுதல் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளுதல்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பாக கருத்திட்டமொன்றைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
- வீதிப் பாதுகாப்பு மற்றும் அதனோடு இணைந்த கொள்கைகளையும் கருத்திட்டங்களையும்பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகள்
- வீதிப் பாதுகாப்பு தொடர்பான ஆணைக்குழுவொன்றை அமைத்தல்.
- தரவுக்களஞ்சியமொன்றைத் தயாரித்தல்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையொன்றைத் தயாரித்தல்.
- தொலைக்காட்சி, வானொலி பிரசார நடவடிக்கைகள்
- அடையாளம் காணப்படாத வாகனங்களினால் விபத்துக்குள்ளாகின்றவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்.
- மாகாண வீதிப் பாதுகாப்பு குழுக்களை அமைத்தல் மற்றும் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் எதிர்கால நடவடிக்கைகள்.
- பலியானவர்கள் தினத்தை நினைவுகூர்தல்.
- பாடசாலை மாணவர்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், தனியார் பஸ் சாரதிகள் ஆகியோருக்கு அறிவூட்டுதல்.
- 2016 மார்ச் மாதத்தில் வீதிப் பாதுகாப்பு தேசிய தினத்தைக் கொண்டாடுதல்.
- பாடசாலைகளில் வீதிப் பாதுகாப்பு மாணவர் கழகம் அமைத்தல்.
- தெற்காசிய வலய நாடுகளில் அரச மற்றும் தொண்டர் அமைப்புகளின் பங்கேற்புடன் வீதிப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வொன்றை நடத்துதல்.
- கட்டுபெத்த வீதித் தடையுள்ள இடத்திலிருந்து கவுடான சந்திவரைக்குமான வீதியை இடை தடுப்பு வலயமாக்குதல்.
- அந்த வீதித் தடையுள்ள இடத்தைப்பற்றி அறிவூட்டும் நிலையமாக்கி காட்சிப்படுத்தும் பலகைகளைப் பொருத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அறிவூட்டுதல்.
- தேசிய அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தும் குறியீடுகளை அப்பாடசாலைகளில் ஸ்தாபித்து அதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு செயல்முறை அறிவை வழங்குதல்.
- வீதிப்பாதுகாப்பு மாணவ செயலணியொன்றை அமைத்தல். அதற்குரியதாக அறிவூட்டுகிற ஒவ்வொரு பாடசாலையிலும் பாடசாலை மட்டத்தில் கழகங்களை உருவாக்குதல்.
- மார்ச் மாதத்தில் வீதிப் பாதுகாப்பு தேசிய தினத்தைப் பிரகடனப்படுத்தி நாடு முழுவதிலும் வீதிப்பாதுகாப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துதல்.
- ஒவ்வொரு தனியார் தொழிற்சாலையிலும் உற்பத்தித் திறன்மிக்க சாரதிகளை உருவாக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான அறிவை வழங்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தல்.
- அனைத்து இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் சாரதிகளுக்கு முறையாக அறிவூட்டுதல்.
- பாடசாலை வேன் சாரதிகளுக்கு அறிவூட்டி சேவை குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் என்பவற்றை ஆராய்ந்து அவற்றிக்கு ஒழுங்கான பரிகாரங்களை வழங்குதல்.
- முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஒழுங்குமுறையாக மற்றும் மனோபாவ ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தரமான முச்சக்கர வண்டி சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு உரிய பின்னணியை உருவாக்குதல்.
- அறிவூட்டும் பெயர்ப் பலகைகளையும் வீதி ஒழுங்கு சமிக்ஞை பலகைகளையும் ஒவ்வொரு நகரத்திலும் காட்சிப்படுத்துதல்.
| නම සහ තනතුර | දුරකථන | විද්යුත් තැපෑල |
|
මංජුල කුලරත්න මහතා සභාපති |
+94 113 168 501 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
එන්.එම්.එම්. මුෂාරත් මහතා ලේකම්/අධ්යක්ෂ |
+94 112 696 890 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
நோக்கு
அனைவருக்கும் பாதுகாப்பான பாதை
செயற்பணி
வீதி விபத்துகளற்ற சமுதாயமொன்றை உருவாக்குதல்.
1998 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் மூலம் போக்குவரத்து அமைச்சின் கீழ் இருக்கின்ற வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இயங்குகின்றது. அனைவருக்கும் பாதுகாப்பான வீதி முறைமையை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்டு செயற்படுகின்ற ஒரே அரச நிறுவனம் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையாகும். இந்த சபை ஒரு தலைவரையும் அரச மற்றும் அரச சார்பற்ற 17 நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவொன்றையும் கொண்டுள்ளது.
அபிவிருத்தியடைந்துகொண்டிருக்கின்ற நாடொன்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்தல், சூழல் மாசடைவதைத் தடுத்தல், சூழல் பாதுகாப்பு, வாகனங்;கள் மற்றும் வாகன கட்டுப்பாடு என்பவற்றுடன் மோட்டார் வண்டிகளால் ஏற்படுகின்ற விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளுதல் மற்றும் சாலை பாதுகாப்பு என்பவையும கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதான விடயங்களாகும். இதன் நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி என்பற்றின் மூலம் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளுகின்றபோது மோட்டார் வாகனங்களால் ஏற்படுகின்ற விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளுதல், வீதிகளைப் பயன்படுத்துகின்றவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு 2011 - 2020 காலத்தை வீதிப்பாதுகாப்பு தசாப்தமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு அதனோடு இணைந்ததாக இலங்கையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 2011 மே மாதம் 11 ஆம் திகதி வீதிப்பாதுகாப்பு தேசிய மகாநாட்டை நடாத்தி 2011 - 2020 காலத்தை வீதிப்பாதுகாப்பு தசாப்தமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்போது வீதிப் பாதுகாப்பு தொடர்பாக பத்தாண்டு திட்டமொன்றைத் தயாரித்து அதைப்பற்றி அறிவூட்டுவதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் 213 "அ", பிரிவில் இச்சபையின் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் 213 "ஆ", பிரிவின் மூலம் 'வீதிப் பாதுகாப்பு நிதியம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்துக்கு காப்புறுதி கம்பனி தமது மூன்றாம் தரப்பு காப்புறுதியாக 1 மூ தொகையை பங்களிப்புச் செய்கிறது.


